பரபரப்பு…”திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்” – முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை!

ADMK,CM

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில்பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழு நடக்கும் இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களும்,மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் என பலரும் திரண்டுள்ளனர்.

இந்த நிலையில்,வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார்.அப்போது, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என ஓபிஎஸ்-க்கு எதிராக தொடர்ந்து எடப்பாடி ஆதவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதன்பின், அதிமுக பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் வரும்போது, எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.ஸ்ரீவாரு மண்டபத்துக்குள் வந்த ஓபிஎஸ் வெளியேற சொல்லி பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இபிஎஸ் ஆதரவாளர்களின் முழக்கத்தால் அரங்கத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.ஓபிஎஸ் ஒழிக,துரோகி ஓபிஎஸ் என முழக்கமிட்டு வருவதால் அதிமுக பொதுக்குழுவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடயே,பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்கு இபிஎஸ் வருகை புரிந்துள்ளார்.பூங்கொத்து கொடுத்தும்,மலர்கள் தூவியும் அவருக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர் என்று தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர்:”மற்றொரு திருமண மண்டபத்தில் என்ன நடைபெறுகிறது என்பது தெரியும்.ஆனால்,அந்த பிரச்சனைக்கு நான் செல்லவில்லை.அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை.திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்”,என்று கூறியுள்ளார்.முதல்வர் மறைமுகமாக அதிமுகவை சாடியுள்ளார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here