இணையத்தில் திருமணம் படத்தை பார்த்தவர்கள் இந்த அக்கவுண்டுக்கு தொகையை அனுப்பவும் : இயக்குனர் சேரனின் வினோதமான கோரிக்கை

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவை பொறுத்தவரை தனக்கென தனி முத்திரை பதித்தவர் என்றே கூறலாம். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல்,  நடிகராகவும் வலம் வருகிறார். இவர், பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராப், பொற்காலம், வெற்றி கொடி கட்டு போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இவர் திருமணம் என்கின்ற படத்தை அவரே இயக்கி, அதில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் இப்படம் கடந்த மார்ச் மாதம் இப்படம் வெளியானது. அந்த சமயம் மாணவர்களுக்கு தேர்வு நேரம் மற்றும் நாடாளுன்ற தேர்தல் போன்ற காரணங்களால் படம் அவ்வளவு பெரிதாக ஹிட் ஆகவில்லை.

இதனையடுத்து, சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், திருமணம் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்காமல், இணையத்தில் பார்த்தவர்கள், அதற்கான தொகையை எனது வங்கி கணக்கில் செலுத்தி விடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

https://twitter.com/directorcheran/status/1132115367000567808

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment