இந்த மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு இயலாது..!

வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோன பரவுவதால், கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டீக்கடை, ஹோட்டல், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், துணிக்கடை, பெட்ரோல் பங்க், திரையரங்கு உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.