தூத்துக்குடி துப்பாக்கி சூடு:இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில்,13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இந்த நிலையில்,காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வெளி மாவட்டத்தினர் கலந்து கொள்ள அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்,தூத்துக்குடியில் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே,தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment