தூத்துக்குடி துப்பாக்கி சூடு : கார்ப்பரேட் நிறுவனத்திற்காக துப்பாக்கிசூடு நடத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக விசாரித்த தேசிய மனித  உரிமைகள் ஆணையம், அந்த புகார்களை முடித்து வைத்ததை எதிர்த்து, ஹென்றி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை .தாக்கல் செய்தார்.

 துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறையான விசாரணையை நீதிமன்றம்  என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், சீலிடப்பட்ட அறிக்கை ஒன்றை மணி உரிமைகள் ஆணையம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையை, மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மனுதாரருக்கு நக்கலாய் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், அந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிட கூடாது என்றும் 3 தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கருத்து கூறுகையில், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்றும், இந்த வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.