தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்….!! 110 பேரிடம் விசாரணை : அருணா ஜெகதீசன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 110 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார். 209 ஆவணங்கள் இதுவரை சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், குண்டு காயமடைந்தோருக்கு சிகிச்சையளித்து நிவாரணம் வழங்க ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட விசாரணை வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.