தூத்துக்குடி ரௌடியாக நடிக்கும் ப்ரேமம் நாயகன் நிவின் பாலி….! ‘ரிச்சி’ The Thoothukudi Rowdy….

சென்னை : ‘நேரம்’ படத்தை அடுத்து தமிழில் நிவின் பாலி நடித்துள்ள படம் ‘ரிச்சி’. கன்னடத்தில் வெளியான ‘உளிதவரு கண்டந்தே’ என்ற படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் பாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. தற்போது அனைத்து கட்டப் பணிகளும் முடிந்துவிட்ட ‘ரிச்சி’ படத்தை சென்சார் போர்டு பார்வைக்கு அனுப்பியுள்ளனர். இன்னும் சிலதினங்களில் படத்திற்கான சான்றிதழ் கிடைத்துவிடும் என்று காத்திருக்கிறது படக்குழு.

இதுவரை சாஃப்டான வேடங்களில் நடித்து வந்த நிவின் பாலி, முதன்முறையாக இந்தப் படத்தில் தூத்துக்குடி ரௌடியாக நடித்துள்ளாராம். அதற்காக தனது உடல் எடையைக் குறைத்து தாடி வைத்து நடித்திருக்கும் நிவின் பாலி, சண்டை காட்சிகளில் செமையாக ஸ்கோர் பண்ணியிருப்பதாகச் சொல்கிறார்கள் படக்குழுவினர்.
இப்படத்தை தீபாவளிக்குப் பிறகு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ஆக்க்ஷன் ஹீரோவாக நடித்துள்ள நிவின் பாலி, இதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்து மலையாளத்திலும் ஆக்க்ஷன் கதைகளில் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published.