தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா வரும் 26-ம் தேதி தொடக்கம்…!

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா வரும் 26-ம் தேதி தொடக்கம்…!

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 438-ஆம் ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலய திருவிழாவானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவதுண்டு.  வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் வருவதுண்டு.

இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, இந்த திருவிழா பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து, தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 438-ஆம் ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube