கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.இன்று இவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் உள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 13 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்னர் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாநிலசெயற் குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து,வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான், சுப்பு முத்துராமலிங்கம்,சீனிவாச ராகவன்,வாமனன், பூ உலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here