உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் உருவாக்கிய  சிலெக்ஸ் வைரஸ்

உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் உருவாக்கிய  சிலெக்ஸ் வைரஸ்

உலக  அளவில் ஸ்மார்ட் டி.விகள் மற்றும்  மோடம்களை  14 வயது சிறுவன் உருவாக்கிய  வைரஸ் பாதித்து வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் மோடம்களை பிரிக்கர்போட் (BrickerBot) என்ற வைரஸால் பாதிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸை போன்றே சிலெக்ஸ் (Silex) என்ற வைரஸ் உலக அளவில் இன்டர்நெட் மூலமாக  இயங்கும் பொருட்கள் மீது வேகமாக பரவி வருகிறது.
சிலெக்ஸ் (Silex) என்ற வைரஸானது இன்டர்நெட் மூலமாக இயங்கும் பொருட்களின் சேமிப்பு (STORAGE)  மற்றும் அதன் வலைப்பின்னல் (NETWORK) கட்டமைப்பை முற்றிலுமாக அளித்து விடுகிறது.இந்த பொருட்களை செயல் இழக்க செய்கிறது என்று கூறப்படுகிறது.இந்த வைரஸை  14 வயது உள்ள சிறுவன்  ஒருவன் உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Join our channel google news Youtube