இந்த வெற்றி மிக ஈஸியாக வந்தது இல்லை – கமலஹாசன்

10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் ரிலீஸ் செய்த படம் விக்ரம் தான் என கமலஹாசன் பேச்சு.

விக்ரம் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில், விக்ரம் படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், நடிகர் கமலஹாசன் அவர்கள் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று சொல்லிவிட முடியாது; உடன் நின்றவர்களால்தான் வெற்றி சாத்தியமானது 10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் ரிலீஸ் செய்த படம் விக்ரம் தான். என் திறமைக்கு அதிகமாக என்னை தமிழக மக்கள் தூக்கி பிடித்திருக்கிறார்கள் என்பதே உண்மை; என்னை விட திறமையானவர்கள் இங்கே காணாமல் போயுள்ளார்கள், அதையும் நான் பார்த்திருக்கிறேன்.

இந்த வெற்றி மிக ஈஸியாக வந்தது இல்லை; சாய்ந்து படுத்துவிட மாட்டேன். இனி பதட்டமாக இறுக்கையின் நுணியில் நான் அமரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment