நெல்லை மாநகரில் இந்த இரண்டு நாள் முழு ஊரடங்கு.!

நெல்லை மாநகரில் ஏப்ரல் 26, மற்றும் மே 03 ஆகிய இரண்டு தினங்கள் முழு ஊரடங்கு என ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில், இன்று வரை 1596 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 635 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா அதிகம் பாதித்த மாவட்டமாக சென்னை உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் நெல்லை  6-வது மாவட்டமாக உள்ளது.இந்நிலையில், நெல்லை மாநகரில் ஏப்ரல் 26, மற்றும் மே 03 ஆகிய இரண்டு நாள்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாள்களில் மருத்துவமனை, மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் கட்டாயம் மூடப்படவேண்டும் என கூறினார்.

author avatar
murugan