அமெரிக்காவை போல தமிழகத்திலும் இதை செய்ய வேண்டும் – சீமான்

அமெரிக்கா போல ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், உடனடியாக எண்ணப்பட்டு முடிவு தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஓட்டுப் பதிவு எந்திரம் இயந்திரம் முறையை கைவிட்டு வாக்குச்சீட்டு முறையை கொண்டுவரவேண்டும்  தெரிவித்தார்.

மேலும், பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை கண்டுகொள்ளவில்லை என்றும், தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு 10 ஆண்டுகள் தடை விதித்தால் தான் இது குறித்து ஒரு பயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா டிஜிட்டல் இந்தியா என கூறிக் கொண்டால் மட்டும் போதாது. ஓட்டளிக்கும் முறை இயந்திரமாக மாற்றி விட்ட நிலையில், தொழில்நுட்பத்தை கையாண்டு முடிவுகளை அறிவிப்பதில் ஏன் காலதாமதம் ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், அமெரிக்கா போல ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், உடனடியாக எண்ணப்பட்டு முடிவு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.