தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த நடிகை மந்திரா தமிழ் சினிமாவில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான பிரியம் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, ரெட்டை ஜடை வயசு, கல்யாண கலாட்டா, கண்ணன் வருவான், குபேரன், சிம்மாசனம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவருக்கு அந்த சமயம் பல ரசிகர்கள் கூட்டம் இருந்த காரணம் என்னவென்றால், அவர் கவர்ச்சியாக நடித்த கதாபாத்திரங்கள் தான். எந்த வித கிளாமர் ரோலாக இருந்தாலும் சரி நடிகை மந்திரா மறுக்காமல் நடித்துக்கொடுத்துவிடுவார். அந்த சமயம் அழகாக இருந்த காரணத்தால் என்னவோ இவருக்கு பட வாய்ப்புகளும் தொடர்ச்சியாக குவிந்தது.
ஆனால், மந்திரா ஓவராக கவர்ச்சியாக நடித்த காரணத்தால் என்னவோ அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கி தமிழ் சினிமாவே விட்டே ஓடிவிட்டாராம். கடைசியாக தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரே ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிகை மந்திரா நடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு மந்திரா எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
அந்த சமயம் உடல் அமைப்பு கவர்ச்சிகரமாக இருந்த காரணத்தால் அவருடைய சினிமா வாழ்க்கைக்கு அது உதவியாக இருந்தது. எனவே தொடர்ச்சியாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் நடித்தாலே கவர்ச்சியாக தான் நடிப்பார் என அவருக்கு நல்ல படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாம்.
எனவே இதனால் நொந்து போன நடிகை மந்திரா அப்படியே ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்தது போல மீண்டும் தமிழ் சினிமாவை விட்டு விட்டு தெலுங்கு சினிமாவிற்கு ஓட்டம் பிடித்துவிட்டாராம். இந்த தகவலை பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.