கோபப்படாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் – மனம் திறந்த தோனி..!

கோபப்படாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் – மனம் திறந்த தோனி..!

கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கேப்டன் ஆக இருந்து பல சாதனைகள் படைத்துள்ளார். ஐசிசி போட்டிகளின் அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி மட்டும் தான். இவரை  “கேப்டன் கூல்” என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். காரணம் இவர் போட்டியின் போது  மைதானத்தில் வைத்து வீரர்கள் மீது கோவப்படுவதில்லை.
இவர் இந்த வருடம் நடந்து முடிந்த உலககோப்பைக்கு பின் எந்த வித தொடரிலும் விளையாட வில்லை. உலகக்கோப்பைக்கு பின் தனது ஓய்வை அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தோனி அது பற்றி எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.Image result for dhoni
இந்நிலையில் உலகக்கோப்பைக்கு பின் முதல் முறையாக தோனி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் ,  “நானும் மற்றவர்களை போல சாதாரண மனிதன் தான் எனக்கும் கோபம் வரும். ஆனால் மற்றவர்களை விட கோபத்தை கட்டுப்படுத்துவதால் எனது கோபம் வெளியே தெரிவதில்லை.
நானும் சில சமயங்களில் வெறுப்பு அடைவேன் ஆனால் அதனை பற்றி சிந்திக்காமல் விரைவில் அதில் இருந்து வெளியே வந்து விடுவேன்.பின்னர் அதற்கான தீர்வை தேடுவதில் தான் எனது  எண்ணம் இருக்கும். அதுவே எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழியாக கையாள்கிறேன் என்று கூறினார்.”
உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்தால் தான் நல்ல தீர்வு கிடைக்கும். முடிவை நினைத்து செயல்பட்டால் அது அதிக நெருக்கடியை தரும் ஆகையால் நான் முடிவை நினைத்து செயல்பட மாட்டேன். ஒரு அணியின் கேப்டன் என்பவர் அனைவரிடமும் ஒன்றாகவும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube