தளபதி விஜய்யின் கனவு கதாபாத்திரம் இதுதானாம்.!

தளபதி விஜய் வில்லனாக நடிக்கவே ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லாக்டவுன் முடிந்ததும் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சில வருடங்களுக்கு முன்பு இவர் அளித்த பேட்டியில் தனது நடிக்க விரும்பும் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

அதில் தனக்கு வில்லனாக நடிப்பதே ஆசை என்றும், அதிலும் அனைவருக்கும் பிடித்த வில்லனாக அதாவது அமைதிப்படை சத்யராஜ் போல் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.