என்னுடைய அடுத்த கட்ட இலக்கு இதுதான்! தங்கம் வென்ற இளவேனில் பேட்டி!

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் கலந்துக் கொண்டு, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், இளவேனில் அளித்துள்ள பேட்டியில், ” துப்பாக்கி சுடுதலில் தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்த பெற்றோருக்கு எனது பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன் என்றும், தமிழகத்தில் தான் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சீனாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராவது தான் எனது அடுத்தகட்ட இலக்கு என, மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.