எனக்கு பிடித்த சதம் இதுதான்... ரோஹித் சர்மா ஓபன் டாக்.!

எனக்கு பிடித்த சதம் இதுதான்... ரோஹித் சர்மா ஓபன் டாக்.!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார், அவர் அடித்த இரட்டை சதத்தின் சாதனையை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம், மேலும் அவர் அடிக்கும் சிக்ஸர்களை வைத்து அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்று அழைக்கின்றனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதனால் அணைத்து கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலே இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சமீபத்தில் தனது சமூக வலைதளபக்கங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்பொழுது ஒரு ரசிகர் கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் 5 சதம் அடித்தீர்கள் அந்த 5 சதங்களில் உங்களுக்கு பிடித்த சததத்தை பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு எனக்கு தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக அடித்த சதம் தான் மிகவும் பிடித்தது.

மேலும் தென் ஆப்ரிக்கா அந்த போட்டியில் மிகவும் அருமையாக விளையாடினார்கள், ரபாடா, மோரிஸ், இம்ரான் தாஹிர் போன்ற தரமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அடித்தேன் அவர்கள் பந்துவீச்சை அடிப்பது மிகவும் கடினம் என்றும் கூறியுள்ளார்.

Latest Posts

சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன் 
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!