அட நம்ம குஷ்பு மேம்மா இது.! இவ்வளவு ஸ்லிம்மாக மாறியவிட்டாரே.!

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய குஷ்புவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. கோவில் எல்லாம் இவருக்காக ரசிகர்கள் கட்டியுள்ளனர். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் குஷ்பு. சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பெரிதும் ஷாக்கில் உள்ளனர். ஏனெனில் குஷ்பு உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது உள்ள இளம் நடிகைகளுடன் போட்டி போடும் அளவிற்கு மாறிவிட்டீரே என்று கமென்ட் செய்து வருகின்றனர். தற்போது குஷ்புவின் இந்த அட்டகாசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.