இதுவும் கழக நிகழ்ச்சிதான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

cmmkstalin

இதுவும் கழக நிகழ்ச்சிதான். இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள் என முதல்வர் ட்வீட். 

சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல திருமண விழா இன்று காலை நடந்தது. உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்கள் ஓய்வெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள்! என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சில நாள் ஓய்வுக்குப் பின்பு, மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இல்லத் திருமண விழாவில் இன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

இதுவும் கழக நிகழ்ச்சிதான். இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள்!’ என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here