என்றும் இளமையாக இருக்க இந்த ஐஸ் க்யூப் போதும்..!

தோல் மிகவும் இளமையாக இருக்க அரிசி தண்ணீர் ஐஸ் க்யூப் பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

பொதுவாகவே பெண்கள் அவர்களது முகம் மற்றும் சருமத்தை இளமையாக, அழகாக வைத்து கொள்ள விரும்புவார்கள். இதற்காகவே பல்வேறு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவார்கள். எவ்வளவு தான் கிரீம் உபயோகித்தாலும் அவையெல்லாம் அந்த நேரத்திற்கு அழகாக தெரியுமே தவிர, நிரந்தர பலனை தராது. இயற்கையான முறையில் முகத்தை பராமரித்து வாருங்கள். நிச்சயம் அந்த பலன் தொடர்ச்சியாக நீடித்து நிலைத்து இருக்கும்.

பெண்கள் என்றும் இளமையாக இருக்க அரிசி நீரால் செய்யப்பட்ட ஐஸ் கட்டிகளை முகத்தில் பயன்படுத்தலாம். அரிசி நீர் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன. இவையனைத்தும் சருமத்திற்கு அதிகமான பலனை தரும். அதற்கு நீங்கள் அரிசி நீரால் செய்யப்பட்ட ஐஸ் கட்டியை முகத்தில் மசாஜ் செய்து வரலாம். அதனால் அதனை எப்படி செய்வது மற்றும் இதன் பலன்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐஸ் க்யூப் செய்ய தேவையான பொருட்கள்: அரிசி தண்ணீர் – இரண்டு டீஸ்பூன், ரோஸ் வாட்டர் – இரண்டு டீஸ்பூன், பால் – இரண்டு டீஸ்பூன், சமைத்த அரிசி – இரண்டு டீஸ்பூன்.

செய்முறை: முதலில் நீங்கள் அரிசி தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வேகவைத்த அரிசியையும் சிறிது ரோஸ் வாட்டரையும் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இதனுடன் சிறிது பால் சேர்த்து கொள்ளவும். இந்தக் கலவையை ஐஸ் கியூப் ட்ரேயில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உறைய வைக்க வேண்டும். அதன் மீது மஸ்லின் துணி போட்டு போர்த்தி வைக்க வேண்டும். இந்த ஐஸ் கட்டிகளை எடுத்து கைகளால் முகத்தில் மசாஜ் செய்யவும். பதினைந்து நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு, உங்கள் முகத்தை சாதாரண நீரில் கழுவ வேண்டும். இது போன்று செய்வதன் மூலம் உங்கள் சருமம் மென்மையாக இருக்கும்.

மேலும் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்தில் உள்ள கறுத்து போன தோல்களை நீக்கி முகத்தை பொலிவாக வைக்க உதவும். அரிசி நீர் உங்கள் சருமத்தில் னிடுதலை நீக்கவும் உதவுகிறது. கோடையில் முகம் பளபளப்பாக இருந்தால், அரிசி நீரில் செய்யப்பட்ட ஐஸ் கட்டிகளை முகத்திற்கு பயன்படுத்தலாம். அரிசி தண்ணீர் உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றும். மேலும் இந்த தண்ணீர் உங்கள் முகத்திற்கு ஒரு டோனராக பயன்படும். இந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் தோல் மிகவும் இளமையாக இருக்கும்.

Leave a Comment