உங்கள் பாவங்கள் நீங்கி, நீங்கள் நினைத்த ஆசைகள் நிறைவேற இந்த கணபதி மந்திரம் போதும்..!

உங்கள் பாவங்களை நீக்கி, நீங்கள் நினைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற இந்த ஒரு கணபதி மந்திரம் போதும்.

பொதுவாகவே நாம் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் விநாயகரை வணங்கி விட்டு தான் தொடங்குவோம். முழுமுதற்கடவுளாக விளங்கும் விநாயகரை மனதார வேண்டி விட்டு எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும். உங்களது வேண்டுதல்கள் நல்லபடியாக நிறைவேறிட கணபதியின் இந்த கணநாயகாஷ்டகம் மந்திரத்தை படித்திட உங்களது பாவங்கள் நீங்கி வேண்டுதல் நிறைவேறிடும்.

விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என்பதால் அவரை நினைத்து வழிபட்டாலே உங்களது வாழ்க்கையில் நீங்கள் வேண்டிய பலன்கள் கிடைக்க தொடங்கும். அதிலும் குறிப்பாக விநாயகர் மந்திரங்களில் முக்கியமான ஒரு மந்திரம் இந்த கணநாயகாஷ்டகம் மந்திரம். இந்த மந்திரத்தை விநாயகருக்கு உகந்த நாளான சங்கடஹர சதுர்த்தி மற்றும் புதன் கிழமையில் படிக்க வேண்டும்.

விநாயக பெருமானுக்கு பிடித்த அருகம்புல், வெள்ளெருக்கு இவற்றில் மாலை செய்து அணிவிக்கலாம். இப்படி அணிவிப்பதன் மூலம் நீங்கள் வேண்ட நினைக்கும் விஷயம் எத்தகைய தடங்கலும் இல்லாமல் நிறைவேறும். மேலும், விநாயகருக்கு பிடித்த அரச மர இலை இருபத்தி ஒன்று என்ற கணக்கில் எடுத்து கொண்டு விநாயகர் முன்னிலையில் வைத்து கொள்ள வேண்டும்.

பிள்ளையாருக்கு பிடித்த கொழுக்கட்டை அல்லது சுண்டல் போன்று பிரசாதம் செய்து வைத்து அவர் முன் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளுங்கள். அப்போது இந்த கணநாயகஷ்டகத்தை படிக்க வேண்டும். அந்த மந்திரம் இதோ,

கணநாயகாஷ்டகம் மந்திரம்: 

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்

லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம்

பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்

பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்

சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

கஜவக்த்ரம் ஸுரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம்

பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே

யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா

ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம்

ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர:

விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி!!!

இந்த மந்திரத்தை படித்து முடித்து விட்டு உங்கள் வேண்டுதலை விநாயகப்பெருமானிடம் வேண்டிக்கொள்ளுங்கள். நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். நம்பிக்கையோடு பிள்ளையாரை வழிபாட்டு வாருங்கள், நல்லதே நடக்கும்.

Leave a Comment