இந்த தாடியா…? அந்த தாடியா…? சவால் விட்ட கமலஹாசன்…!

இந்த தாடியா…? அந்த தாடியா…? சவால் விட்ட கமலஹாசன்…!

ஜெயலலிதா போல நானும் கேட்கிறேன். அந்த அம்மா இந்த லேடியா? அந்த மோடியா? என்று கேட்டார்கள். நான் கேட்கிறேன், இந்த தாடியா…? அந்த தாடியா…? 

தமிழக சட்ட தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அணைத்து கட்சியினரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்ட மன்ற தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், திருச்சி பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய கமலஹாசன், ‘ கமல்ஹாசன் ஹெலிகாப்டர்ல போறாரு, இவ்வளவு பணம் யாரு கொடுத்தது. பாஜகவினர் தான் கொடுத்தார்கள் என்று கூறுகிறார்கள்.  இதில் ஏதாவது நியாயம் இருக்கா? நான் மேடைக்கு மேடை அவர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறேன்.

கோவை தெற்கு தொகுதியை பாஜக நம்பி இருப்பதால் தான், நான் தேடி போய் அந்த தொகுதியில் நிற்கிறேன். நான் தேர்தலில் ஜெயித்த பின், பாஜக முன்பு திமுக கைகாட்தி நிற்கிறதா இல்லையா? என்று பாருங்கள். ஜெயலலிதா போல நானும் கேட்கிறேன். அந்த அம்மா இந்த லேடியா? அந்த மோடியா? என்று கேட்டார்கள். நான் கேட்கிறேன், இந்த தாடியா…? அந்த தாடியா…?  என சவால் விட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube