பார்ப்பதற்கு கரும்புலி போல தோன்று இந்த விலங்கு கரும்புலி அல்ல! வாங்க என்னதுனு பார்ப்போம்!

தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்ட்டின் இன விலங்கு இதுதான்.

நீலகிரியின் சாய்வான பச்சை மலையடிவாரத்தில், கருப்பு நிறத்துடன் ஒரு விலங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறது. இதனை முதலில் பார்க்கும் போது, கரும்புலி போல தோன்றுகிறது. இதனை தூரத்தில் இருந்து பார்க்கும் போது, புலி போன்றோ அல்லது கரும்புலி போன்றோ தோன்றுகிறது.

 ஆனால், அதனை தெளிவாக கேமராவை ஜூம் செய்து பார்க்கும் போது தான் அது வேறொரு விலங்கு என தெரிய வருகிறது. இந்த விலங்கின் பெயர் கரும்வெருகு அல்லது நீலகிரி மார்ட்டின். தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்ட்டின் இன விலங்கு இதுதான். இவை மாமிச உண்ணிகள் என்று அறியப்படுகிறது.

இந்த விலங்கானது தென்னிந்தியாவில் நீலகிரி மலைகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. கேமராவில் சிகிரியுள்ள இந்த விலங்கின் வீடியோவை, இந்திய வன சேவை அதிகாரி சுதா ராமன் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இந்த வீடியோவை பதிவிட்டு, ‘”இது நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளாக் பாந்தர் அல்ல. இது நீலகிரி மார்டன், மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறு பகுதிகளில் தென்படுகிறது. இது ஆபத்தில் இருக்கும் மற்றும் அழிந்து வரும் ஒரு ஆர்போரியல் விலங்கு. தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே மார்டன் இனம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் இந்த வீடியோ, கிட்டத்தட்ட 31,000 பார்வைகளையும், நூற்றுக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமென்டுகளைப் பெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.