,

ஆளுநரின் இந்த செயல் அதிக பிரசங்கி தனமானது மட்டுமல்லாமல், அயோக்கியத்தனமானது – வைகோ

By

Vaiko

தமிழக ஆளுநர் பிஜேபியின் ஏஜெண்டாக, உளவாளியாக செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறார் என வைகோ பேட்டி. 

கோவை விமான நிலையாயத்தில் வைகோ அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஈவு இரக்கமற்ற, மூர்க்கத்தனமான, தான்தோன்றி தனமான காரியங்களை செய்கிற ஒரு ஆளுநர் ஆர்.என்.ரவி என்கிற பெயரிலே ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

முதல்வருக்கு தான் யாரை எந்த இலாக்காவிலே அமைச்சராக்கும் உரிமை உள்ளது என் அரசியல் சட்டம் தெளிவாக சொல்லுகிறது. ஆனால், அவர் இலாக்காக்களை பிரித்து கொடுத்ததை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியது, அதிக பிரசங்கி தனமானது மட்டுமல்லாமல், அயோக்கியத்தனமானதும்.

தமிழக ஆளுநர் பிஜேபியின் ஏஜெண்டாக, உளவாளியாக செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறார். ஆளுநர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்ல, மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தது முதல்வர் மு.க.ஸ்டாலினை தான் என தெரிவித்துள்ளார்.