,
ops

இந்த செயல் வேலியே பயிரை மேய்வது போல உள்ளது – ஓபிஎஸ்

By

ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை அரசே சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், ‘திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனம் தான் சீரழிந்து கொண்டிருக்கிறது என்றால், ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை அரசே சீரழித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக, ஆவின் நிறுவனம் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும், ஆவின் நிறுவனத்தில் பணியாற்றிய குழந்தைத் தொழிலாளர்களுக்கான இரண்டு மாத சம்பளத்தை உடனடியாக வழங்கவும், குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனத்தின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.