14 ஆண்டுகளுக்கு பின் திருநள்ளாறு குடமுழுக்கு விழா..!குவிந்த பக்தர்கள் கோலாகலம்..!

15

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுக் கோயில்களில் சுமார் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதுமட்டுமல்லாமல் சோழர்காலத்தில் இருந்தது போன்றே அதே பழமையை மீட்டெடுக்கும் வகையில் கோயில்களில் இந்த திருப்பணிகள் செய்யப்பட்டன.

Image result for thirunallar kumbabishekam

மேலும் 9 சுற்றுக் கோயில்களுக்கு கடந்த ஜனவரி 27 அன்று தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த நிலையில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் எல்லாம்  கடந்த 3 தேதி தொடங்கியது.

இந்நிலையில் இன்று காலையுடன்  8 கால யாக பூஜைகள் அனைத்தும் நிறைவு பெற்றது இதனை தொடர்ந்து 9.15 மணியளவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மற்றும் காரைக்கால் இருந்து வந்து குவிந்துள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 14 ஆண்களுக்கு பிறகு இந்த கும்பாபிச்ஷேகமானது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.