சூடுபிடிக்கும் தேர்தல் களம்!இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திருமாவளவன்

15
  • தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது.இதற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார்.விழுப்புரத்தில் உதயசூரியனிலும் சிதம்பரத்தில் தனிச்சின்னத்திலும்(பானை) விசிக போட்டியிடுகிறது.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் இன்று  வேட்புமனு தாக்கல் செய்கிறார்.