“கொரோனா பரவலின் மூன்றாம் அலை உருவாகி வருகிறது”- துணை சுகாதார அமைச்சர்!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலின் மூன்றாம் அலை உருவாகி வருவதாக அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்பொழுது உலகளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் உலகளவில் போடப்பட்டு வருகின்றது. ஆயினும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் உலகளவில் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுளள்து.

அந்தவகையில் ரஷ்யாவில் நாள் ஒன்றுக்கு 97,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், டாஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வை மேற்கோள் காட்டிய துணை சுகாதார அமைச்சர் டாட்டியானா செமனோவா தெரிவித்துள்ளார்.

மேலும், கோடை கால இறுதியில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்க வாய்ப்புள்ளதாக பிரதமர் புதின் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது, குறிப்பிடத்தக்கது.