30.3 C
Chennai
Friday, May 7, 2021

மூன்றாவது டி20 போட்டி! ஹாட்ரிக் வெற்றியை பெறுமா இந்தியா!

இந்தியஅணி ,வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் செய்து 3 டி -20 , 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் இரண்டு டி -20 போட்டிகள்  புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது.

நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில்  5 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தது. பிறகு 168 இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ்  களமிறங்கிது.

இந்நிலையில் 15.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் அடித்து விளையாடி கொண்டு இருந்த போது  மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தினர். ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் முறைப்படி இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் இன்றைய மூன்றாவது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.

Latest news

Related news