புதுசா ஸ்மார்ட் போன் வாங்கினால் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

ஒரு புது ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற கனவு நம்மில் பலருக்கும் இருக்க கூடியது தான். என்ன தான் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் அதனை எப்படி ஆரம்பத்தில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதில்லை.

புதுசாக வாங்க கூடிய ஸ்மார்ட் போனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதை காட்டிலும் சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம். இந்த பதிவில் அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

ஆன்டி வைரஸ்
புதுசாக வாங்க கூடிய ஸ்மார்ட் போன் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்க ஆன்டி வைரஸ் போட விரும்புவோம். ஆன்டி வைரஸ் ஆஃப்ஸ்களை பதிவிறக்கம் செய்வதால் தான் உண்மையில் நம் மொபைல் பாதிக்கப்படுகிறதாம். எனவே, ஆன்டி வைரஸ் ஆஃப்ஸ்களை புது போனில் பதிவிறக்கம் செய்யாதீர்கள்.

மெமோரி கார்டு
பழைய போனில் இருந்த மெமோரி கார்டை அப்படியே புது போனில் போட்டு விடாதீர்கள். இதில் வைரஸ் உள்ளதா என்பதை செக் செய்து விட்டு பயன்படுத்துவது சிறந்தது.

அவசியம்!
மொபைலில் ஒரு சில செட்டிங்ஸ்-சை எனேபிள் செய்வது மிக அவசியம். குறிப்பாக Google Play Protect, Verify Unknown Source போன்ற ஆப்ஷன்களை enable செய்வதால் புது மொபைலை ஹேக்கர்களிடம் இருந்து காத்து கொள்ளலாம்.

ரூடிங் (Rooting)
புது மொபைல் வாங்கிய பலரும் மொபைலை ரூடிங் செய்ய விரும்புவர். இது 95 சதவீதம் மொபைலுக்கு பாதிப்பை தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மீறி ரூடிங் செய்தால் மொபைலை மிக எளிதான முறையில் ஹேக் செய்து விடலாம்.

முதல் காரியம்
எதை செய்கிறீர்களோ இல்லையோ, புது மொபைலை வாங்கிய உடன் அதில் பாஸ்வேர்ட் போடுவது மிக முக்கியமானது. மேலும், டேம்பேர்ட் கிளாஸ், பேக் கேஸ் ஆகியவையும் இதில் அடங்கும். புது மொபைலில் தேவையற்ற ஆப்ஸ்கள் in built-ஆக இருந்தால், அதனை force stop செய்து விடுவது சிறந்தது.

மேற்சொன்ன டிப்ஸ்களை வைத்து உங்களின் புது ஸ்மார்ட் போனை நீண்ட காலம் பாதிப்பில்லாமல் வைத்து கொள்ளலாம்.

 

Leave a Comment