திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் – காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜயகுமார்

பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் வீட்டின் அருகே கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். மூவரும் கடையில் இருந்த போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜயகுமார், இந்த மூவரும், லஷ்கர் -ஏ-தொய்பா பயங்கரவாதிகளால் திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இவர் இந்த சம்பவம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்த பின் ஐஜி விஜயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், பயங்கரவாதிகள் வாசிம் பாரியின் குடும்பத்தை உன்னிப்பாக கவனித்து தான் பயங்கரவாதிகள் இந்த கொலையை செய்துள்ளனர். இங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்க்கும் போது, லஷ்கர் -ஏ-தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதியையும், உள்ளூரை சேர்ந்த அபித் என்ற பயங்கரவாதியையும்  அடையாளம் கண்டுள்ளோம். அவர்களை காவல்துறை, ராணுவம் மற்றும் சிபிஆர்எஃப் அடங்கிய குழு விரைவில் சுட்டுத்தள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால், அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த காவலர்கள் தான் அலட்சியமாக இருந்துள்ளனர். எனவே, பாதுகாப்பில் இருந்த 10 காவலர்களும் இடைநீக்கம் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.