கேரளாவை ஊழலின் மையமாக மாற்றிவிட்டனர் – அமித்ஷா

கேரளாவை வலது முன்னணி மற்றும் இடது முன்னணி அரசுகள் ஊழலின் மையமாக மாற்றியுள்ளனர்.

கேரளாவில் 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு  தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சாத்தனூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், கோவில் சம்பந்தமான பிரச்சனைகளை பக்தர்கள் வசம் விட்டுவிட வேண்டும் என்றும், அதில் அரசு தலையிட கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும், ஒரு காலகட்டத்தில், கேரள மாநிலம் சுற்றுலா மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாகவும், படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலமாகவும், அமைதியை அதிகம் நேசிக்கும் மாநிலமாகவும் கருதப்பட்டது. ஆனால், வலது முன்னணி மற்றும் இடது முன்னணி அரசுகள் ஊழலின் மையமாக மாற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.