முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு – பொன். ராதாகிருஷ்ணன்

அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை, அதில் மாற்றமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால் தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என கூறிருந்தார்.

இதுபோன்று, பாஜக மாநில தலைவர் எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறியது பாஜக – அதிமுக அமைச்சர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்