இந்த 5 அறிகுறிகள் இருந்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமாம்..!

இந்த 5 அறிகுறிகள் இருந்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமாம்..!

கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை இந்த 5 அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளுங்கள். 

கல்லீரல் என்பது உடலின் முக்கியமான உறுப்பாகும். இது நமது உடலில் உள்ள உணவை ஊட்டச்சத்துக்களாகவும், ஆற்றலாகவும் பிரிக்கிறது. மேலும், இது நமது உடலில் இருக்கும் ரத்தத்தையும் வடிகட்டும். உடலில் முக்கிய வேலைகளை செய்யக்கூடிய இந்த கல்லீரல், பாதிப்பு அடைந்தால் எளிமையாக தெரியாது. ஒருசிலருக்கு பல மாதங்களாக இந்த பாதிப்பு இருந்தாலும் சுலபமாக அது தெரியாது. இந்த 5 அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அபாயம் இருக்கிறது.

வாந்தி: உங்களுக்கு அடிக்கடி வாந்தி வருகிறதா? இப்படி வாந்தி ஏற்படுவது சாதாரணமாக நினைக்க வேண்டாம். ஒரு சிலர் பல மாதங்களாக இந்த வாந்தி தொந்தரவுடன் இருந்தால் அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கலாம். அதனால் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள்.

திடீர் பசியின்மை: சிலருக்கு திடீரென பசியின்மை  ஏற்படும்.எப்பொழுது கேட்டாலும் பசிக்கவில்லை என்று கூறுவார்கள். இதுபோன்று பசிக்காமல் தொடர்ந்து 15 நாட்கள் இருந்தால் இது கல்லீரல் பாதிப்புக்கு அறிகுறியாகும்.

சோர்வு: சில நேரங்களில் நீங்கள் மிகவும் சோர்வாக உணர்கிறீர்களா? லட்சக்கணக்கான வைத்தியம் செய்தாலும் அது போகாது. அதுபோன்று நீங்கள் உணர்ந்தால் கவனமாக இருக்க வேண்டும். உண்மையில், அடிக்கடி சோர்வு ஏற்படுவது மோசமான கல்லீரலின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

வயிற்றுப்போக்கு: பருவநிலை மாற்றம் காரணமாகவோ அல்லது வயிற்றுக் கோளாறு காரணமாகவோ அடிக்கடி வயிற்றுப்போக்கு சிலருக்கு ஏற்படும். ஆனால் அடிக்கடி இதேபோன்ற நிகழ்வு ஏற்பட்டால் அதனை சாதாரண வயிற்றுப்போக்கு என்று அலட்சியம் செய்யாதீர்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

எடை இழப்பு: திடீரென உடல் எடை குறைய ஆரம்பித்து, அதன் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் கல்லீரல் சேதமடைந்தாலும், எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

Join our channel google news Youtube