ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை..! கமல்ஹாசன் அதிரடி…!

இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று என கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமலஹாசன் அவர்கள் கூறுகையில் இந்து மதம் என்ற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை என்றும், சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்கள் தான் இருந்தது என்றும், இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொன்னியின் செல்வம் படம் குறித்து அவர் கூறுகையில், பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பின்பு தான் தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டதாக ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment