,

ஆளுநர் பதவியே இருக்கக்கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது – வைகோ

By

Vaiko

ஆளுநர் நீக்கப்பட்டால்தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம், ஜனநாயகமாக இருக்கும் என வைகோ பேச்சு. 

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மதிமுக சார்பில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 20 ஆம் தேதி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய வைகோ அவர்கள், தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் பதவியே இருக்கக்கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் நீக்கப்பட்டால்தான் தமிழ்நாட்டில்  ஜனநாயகம், ஜனநாயகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.