பறவைக் காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லை- மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன்!

பறவைக் காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லை- மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன்!

பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும்,பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கண்காணிக்க 12 சிறப்பு வழிகாட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசத்தில் சிறப்பு வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன், பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை என கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் இதுவரை யாருக்கும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை எனவும், பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube