தடுப்பூசி தட்டுபாடில்லை…! ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி…! – ஐசிஎம்ஆர்

ஜூலை மத்தியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசித் செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும்  கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.

 இந்நிலையில், ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா இதுகுறித்துக் கூறுகையில், பொது முடக்கத்தை படிப்படியாக தளர்த்துவது பெரும் பரவலுக்கு வழி வகுக்காது. இருந்தாலும் தடுப்பூசி செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பதை உறுதிசெய்யவேண்டும். தடுப்பூசி செலுத்தும் விகிதம் 70 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.

மேலும், தடுப்பூசிக்கு எவ்வித குறையும் இல்லை. ஜூலை மத்தியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசித் செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும். டிசம்பருக்குள் ஒட்டுமொத்த மக்களும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.