அதிமுக தலைமை குறித்த விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,  ஆளுநரை முதலமைச்சர் சந்திப்பது வழக்கமான ஒன்று தான், இது மரியாதை நிமித்தமானது. அதிமுக தலைமை குறித்த விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.

அதிமுகவில் பிரச்சனை வருமா என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் .கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது