நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை – விஜயகாந்த்

நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு.

நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜய்காந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த  பதிவில், ‘நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஈடு இணை செய்ய முடியாத அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் மீது அக்கறை கொண்டு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ‘சின்ன கலைவாணர்’ என போற்றப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை.

தன்னலம் பார்க்காமல் சமூக அக்கறையோடு சேவை புரிந்து வந்த நடிகர் விவேக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

என்னங்க சொல்றீங்க அனிருத் இல்லையா? சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!

Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்…

33 mins ago

ஸ்டுடென்ட்ஸ் எந்த லேப்டாப் வாங்கலாம்-னு ரொம்ப குழப்பமா இருக்கா? இது தான் பெஸ்ட்!

Laptop : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உபயோகிப்பதற்கு சிறந்த லேப்டாப்பும் அதன் அம்சங்களை பற்றியும் இதில் பார்க்கலாம். தற்போதையே காலத்தில் அனைவரிடமும் ஒரு லேப்டாப் கைவசம் வைத்துள்ளனர்,…

52 mins ago

‘தலைவர் 171’ டைட்டில் இதுவா? போஸ்டரில் சொல்லி அடித்த லோகேஷ்…

Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக…

1 hour ago

42 வயசுல இப்படியா? தோனியை பார்த்து வியந்த பிரையன் லாரா!

Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…

1 hour ago

தள்ளிப்போகும் பிரஸ் மீட்.! துல்லியமான தேர்தல் நிலவரம் எப்போது தெரியுமோ.?

Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…

2 hours ago

கருப்பு உலர் திராட்சையின் ஆச்சர்யமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான  நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…

2 hours ago