#Breaking: தமிழகத்தில் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டருக்கு பற்றாக்குறை இல்லை- தமிழக அரசு!

தமிழகத்தில் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டருக்கு பற்றாக்குறை இல்லை என்றும், அரசு மருத்துவமனைகளில் 31,000 ரெம்டெசிவிர் மருந்துகள் இருப்பு உள்ளதகாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 11,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி, இதர மாநிலங்களிழும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனகாரணமாக பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதேசமயத்தில் தமிழகத்திலும் தடையின்றி ஆக்ஸிஜன் சேவை வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அப்பொழுது தமிழக அரசு, தமிழகத்தில் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டருக்கு பற்றாக்குறை இல்லை என்று பதிலளித்துள்ளது. மேலும், 65 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு வழங்கியதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

அதுமட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளில் 31,000 ரெம்டெசிவிர் மருந்துகள் இருப்பு உள்ளதகாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் இல்லை என்றும், அவர்கள் அரசிடம் உதவி கேட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.