” முல்லைபெரியாறில் அணை கட்டும் எண்ணமில்லை ” கேரள அரசு தகவல்…!!

13

கேரள முல்லைபெரியாறில் புதிய அணை கட்ட கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்கிரி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரளா அரசு தரப்பில் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் எண்ணமில்லை. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய அணை கட்டலாமா என்ற ஆய்வு தான் நடத்தி வருகின்றோம்.அதுவும் மாநில அரசுக்குட்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஆய்வு நடத்தி வருகின்றோம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது .