#Farmer Protest:இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, அது கற்பனையில் மட்டுமே -ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் வியாழக்கிழமை ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்து  மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தினர் .

இந்த சந்திப்புக்கு பின்னர் ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்த விவசாய  சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று நான் ஜனாதிபதியிடம் கூறினேன்.

இச்சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை இந்த விவசாயிகள் வீடு திரும்பப் போவதில்லை என்று நான் பிரதமரிடம் சொல்ல விரும்புகிறேன்.இந்தச் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெறாவிட்டால், நாடு பாதிக்கப்படும் என்றார். எதிர்க்கட்சிகள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் ஒன்றாக  நிற்கின்றன” இதை நாடு காண்கிறது என்று கூறினார்.

எந்தவொரு கலந்துரையாடலும், ஆலோசனையும் இல்லாமல் சட்டங்கள் இயற்றப்பட்ட விதம் திரும்பப் பெறப்பட வேண்டும்.”இது இந்தியாவின் யோசனையின் மீதான தாக்குதல். எங்கள் எம்.பி.க்களை எங்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதை அரசாங்கம் தடுக்கிறது.இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, அது கற்பனையில் மட்டுமே உள்ளது, உண்மையில் இல்லை” என்று ராகுல் குற்றம் சாட்டினார்.

author avatar
Castro Murugan