,
Sivakarthikeyan

மாவீரன் படத்தில் காமெடி எல்லாம் கிடையாது…சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்.!!

By

சிவகார்த்திகேயனை பலருக்கு பிடிக்க காரணமே, அவர் காமெடியான கதாபாத்திரங்களை தேர்ந்துஎடுத்து நடிப்பதால் தான். குறிப்பாக பலருக்கும், சிவகார்த்திகேயன் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது தான் மிகவும் பிடிக்கும். ஆனால், தற்போது அவர் நடித்துள்ள மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு காமெடியே இருக்காது என படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் கூறியுள்ளார்.

Sivakarthikeyan
Sivakarthikeyan [Image Source : Twitter/@Premkumar__Offl]

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் ” இதற்கு முன்பு நான் எடுத்த மடோனா திரைபடம் எப்படி இருந்தது. அதில் இருந்து சற்று வித்தியாசமாக இந்த மாவீரன் படம் இருக்கும். படம் கண்டிப்பாக அனைவர்க்கும் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

madonne ashwin sk
madonne ashwin sk [Image source : file image]

இந்தப் படத்திற்காக எந்த சமரசமும் செய்துக் கொள்ளவில்லை நான் உருவாக்கிய இந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் அப்டியே அட்டகாசமாகவும், சிறப்பாகவும், பொருந்தினார். அவருக்காக படத்தில் எந்த ஒரு காட்சியையும் நான் மாற்றவில்லை. நான் என்ன யோசித்தானோ அதே அப்படியே எடுத்தேன்.

Sivakarthikeyan in Maaveeran
Sivakarthikeyan in Maaveeran [Image Source : Twitter/@kollywoodnow]

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு காமெடி காட்சிகள் இருக்காது. படத்தில் அவர் காமெடி செய்யவேமாட்டார். அவரை சுற்றி உள்ளவர்கள் மட்டும் தான் காமெடி செய்வார்கள்” என கூறியுள்ளார். இவர் பேசியதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சிலர் சற்று அதிர்ச்சியில் உள்ளார்கள்.

Maaveeran movie
Maaveeran movie [Image Source : Twitter/@OnlyKollywood]

மேலும், இந்த மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தில் மேலும், சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023