பிரதமர் மோடி- ட்ரம்ப் இடையே சமீப காலமாக எந்த பேச்சும் இடம் பெறவில்லை - வெளியுறவுத்துறை அதிகாரிகள்

சமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும்

By leena | Published: May 29, 2020 12:40 PM

சமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் இடம்பெறவில்லை.

இந்தியா மற்றும் சீன எல்லைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு போர் மூளுவதற்கான வாய்ப்புள்ளதால்,இரு நாடுகளும் தங்களது இராணுவப்படையை தயார் நிலையில் வைத்துள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நான் இந்திய பிரதமரை மிகவும் நேசிக்கிறேன். இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை காரணமாக பெரிய மோதல் ஏற்படவுள்ள நிலையில், சீனா விவகாரத்தில் மோடி அதிருப்தியாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கமளித்த வெளியுறவுத்துறை அதிகாரிகள், 'சமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் இடம்பெறவில்லை.' என தெரிவித்துள்ளனர். 

Step2: Place in ads Display sections

unicc