தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் உள்ளது – முதல்வர் பழனிசாமி

கொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலத்தை சேர்த்தவர்கள் வெளியேறியதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் காலியாக உள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, அப்போது, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய முதல்வர், கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது என்று கூறி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், கொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலத்தை சேர்த்தவர்கள் வெளியேறியதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். நாகையில் விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள், சிறு குறு தொழில் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது என்றும் பல்வேறு கருத்துகள், கோரிக்கைகளை அவர்கள் தெரிவித்தனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும், விழுப்புரம், கடலூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் ஜவுளிப்பூங்கா நாகை மாவட்டத்தில் தொடங்கப்படும். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்றுகுறிப்பிட்டுளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்