#Breaking:முடக்கப்பட்டது தேனி!முழுவிவரம் இதோ

தமிழகத்தில் கொரோனா தொற்று காற்றை விட மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இந்நிலையில் இத்தொற்றிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது,அவ்வாறு தலைநகரை தன் தொற்றால் முழுமையாக முடக்கிய கொரோனா மற்ற மாவட்டங்களையும் முடக்க முனைப்புக்காட்டி வருகிறது.இந் நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கிய உள்ளது.அதன் அண்டை மாவட்டமான தேனியிலும் இத்தொற்று தனது தலையை காட்ட ஆரம்பித்துள்ள நிலையில் தேனி மாவட்ட மாநகராட்சிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.அதன்படி  முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில்  தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர், கூடலூர், கம்பம் ஆகிய நகராட்சிகளுக்கும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha