மாஸ்டர் படத்துக்கே முன்னுரிமை – தியேட்டர் உரிமையாளர்கள்

அனைத்து திரையரங்குகளிலும் திரையிடுவோம் என திருப்பூர் சுப்ரமணியம் தனியார் தொலைக்காட்சியுடம் தகவல் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாகும் என மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவிப்பிற்கு மத்திய அரசு 100% பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என கடிதம் வெளியிட்டதையடுத்து தளபதி ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.

100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி திரும்பப் பெறப்பட்டால் மாஸ்டர் திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளிலும் திரையிடுவோம் என திருப்பூர் சுப்ரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம், 50% இருக்கை என்றால் மாஸ்டர் மட்டுமே வெளியாகும் என நான் சொன்னதாக வெளிவரும் செய்தி தவறு. நான் அப்படி சொல்லவில்லை என செய்தி பரவி வருகிறது. இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.