உலகின் மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு..!

உலகிலேயே மூன்றாவது பெரிய வைரத்தை போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் மூன்றாவது பெரிய வைரம் தற்போது போட்ஸ்வானா நாட்டில் அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரம் 1,098 காரட் அளவுடையது. மேலும், இதன் நீளம் 73 மில்லிமீட்டர், அகலம் 52 மில்லிமீட்டர், தடிமன் 27 மில்லிமீட்டர் ஆகும்.

கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்த பின்னர், இந்த வைரக்கல்லை ஏலம் விடுவதாக போட்ஸ்வானா அரசு முடிவெடுத்துள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பலகோடி ரூபாய் பணம் கொரோனாவிற்கு பிறகு நாட்டை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும், உலகிலேயே முதலாவது பெரிய வைரம் தென் ஆப்பிரிக்காவில் 1095 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவுடையது. உலகின் இரண்டாவது பெரிய வைரம் 2015 ஆம் ஆண்டு போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அளவு 1,109 காரட் என்பது குறிப்பிடத்தக்கது.